Monday, 13 January 2020

ஆண்களுக்கான பொங்கல் சிறப்புப் பதிவு ... ! How to clean cealing Fan

ஆண்களுக்கான பொங்கல் சிறப்புப் பதிவு ... !
1. *சீலிங் ஃபேனை* துடைக்கும் முன் காய்ந்த துணியில் முதலில் துடைத்து விட்டு பின்பு ஈர துடைக்கவும்.இல்லையென்றால் துசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக்கொள்ளும்
2. *லாப்டில்* உள்ள பொருட்களை எடுக்கும் பொது பொறுமையாக எடுக்கவும் கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம்.மண்ட பத்திரம்

3. *சீலிங் ஃபேன்களை* ஆப் செய்து விட்டு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும்.இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்
4. *ஒட்டடை* அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டால் தூசு தும்புகள் கண்,வாய்,தலையில் விழாமல் தடுக்கலாம்
5. *இத்தனை வேலைகள்* கஷ்டப்பட்டு செய்த பின்னால் *''என்ன கிளீன் பண்ணியிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு"* என்று ஒரு அசரீரி கேட்கும்.
அதை கேட்டு பொங்கி எழாமல் சட்டையை போட்டுகொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று ஒரு கப் காபி சாப்பிடவும்.
*அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம்.*
பாதுகாப்புடன் பொங்கலை கொண்டாடுவீர்*
*இவன்* 
ஆண்கள் பாதுகாப்பு பேரவை..

வாலை புவனேஸ்வரி யந்திரம்

தங்கள் இடத்தை தன ஆகர்ஷணம் மிக்கதாக மாற்ற வேண்டுமா ??🌿
ஒரு கண்ணாடி பாட்டிலில் சிறிது முனை உடையாத பச்சரிசியை இடவும்.
பின் ஒரு ருபாய் நாணயம் ஒன்றை இடவும் மேலும் சிறிது அரிசியை இட்டு இரண்டு ருபாய் நாணயம் ஒன்றை இடவும்.

பின் சிறிது அரிசி, அதன் மேல் ஒரு ஐந்து ருபாய் நாணயம், மேலும் சிறிது அரிசி அதன் மேல் 10 ருபாய் நாணயம் பின் மேலும் சிறிது அரிசி பாட்டில் நிறையும் வரை இட்டு மூடி பின், மூடியில் சிறிதாக ஆறு துளையிடவும்.
இதை தங்கள் வீட்டு ஷோ கேஸ் அல்லது பூஜை அறை, அலுவலகம் ஆயின், பணப்பெட்டி அருகே வைத்து விடவும்.
எங்கே வைப்பினும் தினசரி தங்கள் கண் பார்வை படும் இடமாக இருக்க வேண்டும். பிரபஞ்ச சக்தி மூலம் தன ஆகர்ஷணம் செய்யும் சக்தி இதற்கு உண்டு.
மாதம் ஒரு முறை அரிசியை பறவைகளுக்கு இட்டு பின் அதே நாணயங்களை வைத்து மாற்றவும். மிக விரைவாக பலன் தரக்கூடிய சூட்சும பரிகாரம் இது.

சிலரால் மட்டும் எப்படி எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?

அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க என்ன வேண்டும்..? பணம்..? பதவி ஒரு பெரிய பங்களா..? ஆடம்பர வாழ்க்கை…….
இவை மட்டும் கிடைத்து விட்டால் போதுமா..? காலம் முழுவதும் கவலைகளின்றி சந்தோஷமாக இருந்து விடுவோமா..?
சந்தோஷம் எதில் தான் இருக்கிறது?
ரொம்ப சுலபம்.
நம் “எண்ணத்தில்” தான் அது இருக்கிறது.
1. எல்லா மனிதர்களையும், எல்லா நிகழ்வுகளையும் கொண்டாடுங்கள்!
உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு நல்ல விஷயங்களையும் கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலைப் பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். உங்களை சுற்றியிருக்கும் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரின் நல்ல விஷயங்களை ரசியுங்கள்.
கொண்டாடுங்கள்.
மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.. குழந்தைகளிடம் இதை நாம் கற்கலாம், எதையுமே ரசித்துப் பார்த்து மகிழ்வது குழந்தைகளின் குணம்.

2. நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்!
உளவியல் ஆய்வின் படி, ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரைச் சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களைக் குறை சொல்லாத, உங்கள் நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தைச் செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியைக் குறைக்காமல் வைத்திருக்கும்.
3. பிடித்ததைச் செய்யவும்!
பிடித்த விஷயங்களை செய்யும் போது, மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பலருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையைச் செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். வேண்டாம் எனத் தவிர்க்கவும் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையோ, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே? இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி அதிகரிக்கும்.
4. செய்வதைத் திருந்தச் செய்யவும்!
நீங்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் தேவையற்ற சிந்தனைகள் பற்றி நினைக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூளையைக் குழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.
5. கற்றுக் கொள்வதை நிறுத்தாதீர்கள்!
சில ஆய்வுகளின் படி, புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே இருப்பதன் மூலம், மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்குமாம். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசை போடாது எப்போதும் பிசியாக இருக்க வைக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.
6. தடை..அதை உடை.!
எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக் கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனைத் தாங்கும் வலிமை வளர வேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கைத் தானாக அதிகரிக்கும். தன்னம்பிக்கையை வளர்த்தலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
7. எது நடந்தது, அது நன்றாகவே நடந்தது!
நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், உங்கள் கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். சோக நினைவுகள் வருத்தத்தைத் தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.
8. அடிக்கடி சிரியுங்கள்!
அடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கை தானே நாம் வாழ்வது? இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்க வேண்டும்? நகைச்சவை உணர்வு கொண்டவராக மாறி விடுங்கள்.
முடியவில்லையா? ஒரு நகைச்சுவைப் படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப் பயன்படுத்துங்கள்.. அது தான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து..
9. மன்னிக்கக் கற்றுக் கொள்வோம்!
கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் சுயதண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? பதிலாக அவர்களை மன்னித்துப் பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லை தானே? எனவே மறப்போம், மன்னிப்போம் என இருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும் அதிகரிக்கும் தானே !
10. நன்றி சொல்வது, நன்று!
உங்களை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள்.அவர்கள் செய்யும் சிறிய உதவியோ, பெரிய உதவியோ அதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
11. உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!
வீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போது, அதிக மகிழ்ச்சி அடைகிறோம். அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக் கொள்ளுங்கள். உற்சாகம் அதிகமாகும்.
12. ஆதலால் அதிகம் காதல் செய்!
நீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள். எனவே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள்.. காரணம் அன்பு செய்தல் அவ்வளவு சுகம் !
13. நமக்கு நாமே நல்லது!
உலகில் உங்களது மிகச்சிறந்த காதலன் / காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால் தானே சித்திரம்? எனவே, உணவு, உறக்கம் என உங்கள் விஷயங்களில், குறிப்பாக உங்கள் உடல் நலனில் அதிக கவனம் இருக்கட்டும்.
நீங்கள் முதலில் உங்களை விரும்புங்கள்.
ரசியுங்கள்……. கொண்டாடுங்கள்…வாழ்க்கை வாழத் தானே…..
மகிழ்ச்சி பெருகட்டும்.
🐚ஓம் நம சிவாய 🐚

கோவிலுக்குள் புகைப்படம் எடுக்கலாமா


ஆங்கிலேயன் பாரத மக்களை அடிமைப்படுத்திய காலத்தில் அவர்களுடைய சுயநலத்திற்காகவும் தகவல் பரிமாற்றத்திற்கான அடையாளக் குறிகளுக்காக நம்முடைய பாரத தேசத்தில் உள்ள புண்ணிய க்ஷேத்திரங்களில் விக்ரகங்களை புகைப்படம் எடுத்து கொண்டு சென்று தன்னுடைய அதிகாரிகளுக்கு காண்பித்து கொள்ளையடித்து செல்ல திட்டமிடுவதற்கு பயன்படுத்தினார்கள் எனவே அந்த ஆங்கிலேயர்கள் காலகட்டத்தில் அவர்களை புகைப்படம் எடுக்க விடாமல் நம் பாரத தேச வீரர்கள் தடுத்தார்கள் இதுவே காலப்போக்கில் பாதுகாப்பு கருதியே கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க தடை என்று பழக்கப் படுத்தி விட்டது தான் உண்மை

புகைப்படங்களிலோ, கைப்பேசிகளிலோ ஏற்படுகின்ற கதிர்வீச்சுகளால் நம்முடைய ஆதி புராதன புண்ணிய ஷேத்திரங்களில் கருவறையிலுள்ள எண்ணிலடங்கா சக்தி படைத்த கர்ப்பகிரகத்தின் இடத்தை மட்டும் மாற்றாமல் இருக்கும்பட்சத்தில் மூலவர்களும் எந்த ஒரு அணுவளவும் பாதிக்கப்படாது என்பதே உண்மை
உதாரணத்திற்கு நம்முடைய அர்ச்சகர்களும் ஆச்சாரியர்களும் சிவாச்சாரியார்களும் பட்டர் களும் போன்ற பலர் இன்றளவும் கோவிலின் சக்தியை குறையாமல் நிலைநாட்டவும் அன்றாட ஆச்சார அனுஷ்டானங்களுடன் நியம நிஷ்டையுடன் எந்திரீக மாந்திரீக தாந்திரீக ஷோடசோபசார பூஜைகளின் மூலமாகவும் தங்களால் இயன்ற வரையில் பல்வேறு வழிமுறைகளையும் கடைப்பிடித்து காப்பாற்றி வருகிறார்கள், ஆனால் இதில் தற்போதைய நவீன கால யுகத்தில் ஏதோ சிற்சில குற்றம் குறைகள் இருக்கலாம் அவைகளை அறிந்தவர்கள் சுமூகமாக சரி செய்ய ஆலோசனை வழங்கலாம்
இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க குறைந்தபட்சம் நாம் அங்கே செல்லும் போதாவது சில நிமிடங்கள் நம்முடைய மனம் அந்த இறைவன் மீது மட்டுமே நிலைத்து ஒன்றி இருப்பதற்காகவாவது தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்தில் மக்களை அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் கைப்பேசிகளை குறைந்தபட்சம் உட்பிரகாரத்தில் மட்டுமாவது அனைத்து வைக்கலாம் என்பது அடியேனுடைய சிறு கருத்து

*நாவல் பழக் கொட்டைகளை தூக்கி எறியாதீங்க..!*Jamun Seeds For Curing Diabetics Tamil Siddhan

*நாவல் பழக் கொட்டைகளை தூக்கி எறியாதீங்க..!*
*சர்க்கரை வியாதிக்கு மருந்தே அதுதான்..!*
நாவல் பழம், சர்க்கரை வியாதிக்கு பெரிய எதிரியாக விளங்குகிறது. இது ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு மருந்தாய பயன்படுத்தப்படுகிறது.
நாவல் பழ விதைகள் சர்க்கரை வியாதியை தடுப்பதற்கும், சர்க்கரை வியாதியை குணப்படுத்துவதற்கும் மருந்தாக நமது இந்திய ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவமும் பரிந்துரைக்கின்றது.

*எவ்வாறு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது?*
நாவல் பழக்கொட்டைகளில் இருக்கும் ஜாம்போலைன் மற்றும் ஜாம்போசைன் என்ற இரண்டு வேதிமூலக்கூறுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் தடுக்கின்றன.
இதனால்தான் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்து சர்க்கரை வியாதியை முழுவதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
*எப்படி சாப்பிடுவது ?*
*ஸ்டெப்-1 
நாவல் பழக் கொட்டைகளை அதனுடையை சதைப் பகுதியிலிருந்து முற்றிலும் பிரித்தெடுக்க வேண்டும். அதனை நன்றாக சாப்பிட்டு விட்டு, விதைகளை கழுவிக் கொண்டாலும் சரி.
*ஸ்டெப்-2 
விதைகளை மூன்று நாட்கள் தொடர்ந்து வெயிலில் காய வைக்க வேண்டும். அதன் பின் அவற்றின் மேலிருக்கும் ஓட்டை தட்டினால் உள்ளே பச்சை நிறத்தில் விதைகள் இருக்கும். அந்த பச்சை நிற விதைகளை எல்லாம் கையினாலேயே தட்டி மீண்டும் வெயிலில் காய வையுங்கள்.
*ஸ்டெப்-3 
நன்றாக இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து அதன் பின் அந்த காய்ந்த பச்சை நிற விதைகளை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
*ஸ்டெப்-4 
இந்த பொடியை ஒரு இறுக்கமான காற்று புகா டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் நாவல் விதைப் பொடியை கலந்து குடித்தால் சர்க்கரை வியாதி முழுக்க முழுக்க நம் கட்டுக்குள் இருக்கும்.
*நோய்யற்ற வாழ்வே குறையற்ற செல்வம்*

கண்களில் உள்ள குறைபாடுகளை நீக்க, பார்வை நன்றாக தெரிய How to heal eye defects Naturally

வணக்கம், இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தில் கண்ணாடி அணியாதவர்கள் மிகமிக குறைவு என்றாகிவிட்டது. இன்றைய வாழ்க்கை சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிய வேண்டிய நிலை உண்டாகிறது. 

கண்ணாடி அணிவது பேஷன் என்றாகி விட்டது. நாம் இன்று தர போகிற சில பாட்டி வைத்திய முறைகளையும், உணவு முறைகளையும் மட்டும் பின்பற்றுங்கள். கண்ணாடி தேவை இருக்காது. பகலில் கூட நிலவை உங்களால் பார்க்க முடியும்.
கண் பார்வை அதிகரிக்க, 4 பேரிச்சம்பழம், 50 கிராம் திராட்சை பழம், மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2 , மாம்பழம் அல்லது பலாச்சுளை 2 துண்டுகள் ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம்.

அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரி விரதம் இருக்கும் முறை!!! Maha Shivratri Fasting Rules

(காலத்தால் மறைக்கப்பட்ட அபூர்வ சிவராத்திரி ரகசியங்கள்.)
(இந்த பதிவை முழுமையாக படியுங்கள். அடுத்த மாதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை வர இருக்கின்ற #யோக #சிவராத்திரியானது அகத்தியர் பெருமான் அருளால் உங்கள் தலையெழுத்தயே மாற்ற கூடிய அபூர்வ சிவராத்திரி. கடந்த சில வருடங்களுக்கு முன் ஸ்ரீ அகத்தியர் விஜயம் என்ற அபூர்வ நூலில் தொடராக வெளிவந்த சிவராத்திரி ரகசியங்கள் பற்றிய அபூர்வ சித்த குறிப்புகளை தொகுத்து பகிர்கிறேன்.அன்று முழுமையான சிவனருளை பெற சித்தர்களின் குரலோடு இணைத்து இருங்கள்.... அனைவருக்கும் பகிருங்கள் நன்மைகள் கோடி பெற)

சித்தர்களின் தலைவராக இருப்பவரும்,தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பெற்று பூமிக்குக் கொண்டு வந்தவரும்,ஜோதிடத்தின் தந்தையும், சித்த மருத்துவத்தின் தந்தையும்,மந்திரங்களின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷியின் அருளால் இந்த பதிவினை சித்தர்களின் குரலில் இன்று உங்களுக்கு வழங்குகிறோம்;
தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும்;அதுவும் எப்படி? இதுவரையிலும் நாம் எத்தனை ஆயிரம் முறை அல்லது எத்தனை லட்சம் முறை மனிதப் பிறவி எடுத்திருப்போம் என்று நமக்குத் தெரியாது; அத்தனை மனிதப் பிறவியிலும் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும்; அப்படி கரைந்து காணாமல் போவதால்,அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்தரகசியம் ஆகும்;
பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும்; ஏனென்றால்,பல சதுர்யுகங்கள் முடிந்து,பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள்; ஆகவே,சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி; ஆலமரத்தடியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகத்தில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே சிவராத்திரி மகிமையை எடுத்துச் சொல்வதற்காகத்தான்;
வெள்ளிக்கிழமையன்று திரயோதசி திதியும் , சதுர்த்தசி திதியும் சேர்த்து வந்தால், அதாவது ஒரே நாளில் பிரதோஷமும் மஹா சிவரத்திரியும் சேர்ந்து வந்த