Monday, 13 January 2020

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

அழித்தல் மற்றும் இறப்பிற்கான செயலைப் செய்பவர் இறைவன் சிவபெருமான். பிரம்மர் உயிரைப் படைப்பதும், விஷ்ணு படைக்கப்பட்ட உயிரை காக்கவும் இருக்கும்போது அந்த உயிருக்கு முக்தி அளிக்கக்கூடிய இறப்பை வழங்கும் இறைவனாக திகழ்பவர் சிவபெருமான்.
★கோபம்:
சிவனின் கோபத்தை நினைத்து பார்க்கும்போது நமக்கு தோன்றுவது அவரின் நெற்றிக்கண் என்றறியப்படும் மூன்றாவது கண். இந்த நெற்றிக்கண் பற்றிய ரகசியம் என்னவாக இருக்கும் என்று நமக்கு அறிந்து கொள்ளும் ஆவல் தானாகவே வருவதுண்டு. இந்து மதத்தின் எல்லா நூல்களும் சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் ஒவ்வொரு கதையிலும் இந்த கண் பற்றிய ரகசியம் வெவ்வேறாக உள்ளன.

★நெற்றிக்கண் திறப்பு:
இறைவன் சிவன் இந்த உலகத்தை அழிவிலிருந்து பல முறை காப்பாற்றியுள்ளார். அவருடைய நெற்றிக்கண் திறக்கும் போதெல்லாம் அது ஒரு சிக்கலான மற்றும் அவசர நேரங்களைக் குறிப்பதாக அறியப்படுகிறது. துன்பங்களுக்கு அழிவைக் கொடுக்கும் நேரமாகவும் இருக்கிறது.
★சிவபெருமான் மற்றும் காமதேவன்:
ஒருமுறை காமதேவன் சிவனை தியானத்திலிருந்து கலைக்க முயற்சிக்கும்போது சிவபெருமான் கோபமடைந்து தன் நெற்றிக்கண்ணை திறந்தார். அவரது நெற்றிக்கண் காமதேவனை அழித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பாக உருவகப்படுத்தப்படுகிறது.
எந்த ஒரு பொருள் சார்ந்த உணர்வும் ஆன்மீக பாதையில் தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது என்பது இதன் மூலம் அறியப்படுவதாகும்.
★சிவபெருமானும் பார்வதி தேவியும்:
ஒரு முறை பார்வதி தேவி விளையாட்டுக்காக சிவனின் கண்களை மூடியதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்ததாக ஒரு கதை உண்டு. சிவபெருமானின் இரண்டு கண்கள் சூரியன் மற்றும் சந்திரன் என்று கூறப்படுகிறது. ஆகவே பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடியவுடன் இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. ஆகவே பிரபஞ்சத்திற்கு ஒளியை கொடுக்க சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணை திறந்ததாக கூறப்படுகிறது.
★யோகிகளின் வழிகாட்டி:
சிவனின் நெற்றிக்கண் ஞான ஒளி மற்றும் விழிப்புணர்வைக் குறிக்கும்.எல்லாவற்றையும் அறிந்த யோகியாக சிவபெருமான் அறியப்படுகிறார். அவருக்கு பின்னால் வந்த யோகிகள் மற்றும் துறவிகளுக்கு அவர் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறார்.

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!*

*🌸வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!*

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

பயன்கள்:
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.
தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.

ஒருவரைப்போல் இன்னொருவர் அமைவதற்க்கு, சாத்தியக்கூறுகளே கிடையாது,

ஒருவரைப்போல் இன்னொருவர்
அமைவதற்க்கு,
சாத்தியக்கூறுகளே கிடையாது,
ஒவ்வொருவரிடமும் உள்ளது,
அவரவரின் குழந்தைப்பருவம் முதல்,
சேகரித்துவந்த சேகரிப்பே,
ஆகவே அனைவரும் தனி தனி மனிதர்கள் தான்,
சிலரை சகித்துக் கொள்கிறோம்,
சிலரை ஏற்றுக்கொள்கிறோம்
அவ்வளவே, ஒருவர் இன்னொருவர் ஆக முடியாது........

*பெரியோர்களின் உபதேச மொழி*
ஏ மனமே! நீ இருக்கின்றவரை எனக்கு
நிம்மதி இல்லை. உன்னை நாயுக்கும், குரங்குக்கும் ஒப்பிட்டு ஆன்றோர்கள்
சொன்னது மிகச் சரியே.
உலக ஆசையில் ஏதோ சாதனைப் புரிவதாக எண்ணி ஏதேதோ செய்கின்றாய். இதனால் பாவ புண்ணியங்கள் கூடுகின்றன.
ஆத்மாவாகிய எனக்கும் பிறவிகள்
கூடுகின்றன.
பெற்றோர்கள் அவர்களின் கடமைகளைச் செய்தனர். கைமாறாக
எதையும் செய்ய முடியவில்லை.
மனைவி, செல்வக் காதலி என்றாய்.
அவள் பேச்சைக் கேட்டால் நான் நல்லவன். இல்லை எனில் நாய்க்குக்
கிடைக்கும் மரியாதைகூட எனக்கில்லை.
பிளைகள் விருப்பத்தை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றினால் நல்ல அப்பா. இல்லை எனில் அவர்கள் காரி துப்பாதது ஒன்றுதான் குறை.
சொந்த பந்தங்களைச் சொல்லவே வேண்டாம். அவர்களது இல்லத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று, செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்தால்
பாராட்டு. இல்லை எனில் அவமரியாதை.
பிறகு பாழாய்ப்போன உடம்போ, ஆயிரம்
தொல்லைகள்தருகின்றன.இவ்வளவிற்கும், காரணம் யார் தெரியுமா? மனமாகிய
நீ செய்கின்றசேட்டைகள்தான்.எல்லாரும்
நடிக்கின்றனர். நீயும் அவர்களோடு சேர்ந்து நடிக்கின்றாய்.
உன்னால்தான் எனக்கு இப்போராட்டம்.
எப்போது செயல்படாது சாகின்றாயோ
அப்போதுதான் எனக்கு விடுதலை.

தன் வினை தன்னை மட்டுமே சுடும்..!


அப்பா அம்மா செய்த புண்ணிய பலன் பிள்ளைகளுக்கு வராதாம்..!!
குதம்பைச் சித்தரின் வித்தியாசமான ஒரு கருத்து..!!
பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது.
எந்த ஒரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு என்பது நவீன அறிவியல் நமக்குத் தந்த நியூட்டனின் மூன்றாம் விதி.
நமது மரபியலில் இந்த ”வினையின் எதிர் வினை” ஆயிரமாண்டுக ளுக்கு முன்னர் இருந்தே பேசப் பட்டு வருகிறது.ஆனால் அவை மதம் சார்ந்த அல்லது ஒருவரின் எண்ணம்,செயல்,சிந்தனை சார்ந்த நம்பி க்கையின் அங்கமாக சொல்லப் பட்டிருக்கிறது.

ஒருவர் தனது முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினை பலன்கள் அவர்களையே வந்து சேரும்.அதே போல பெற்றவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிகளுக்கு வந்து சேரும் என்கிற நம்பிக்கையும், நம்மில் பலருக்கும் உள்ளது. நாம் இந்த கருதுகோளைத்தான் கொண்டிருக்கிறோம்.
ஆனால், குதம்பைச் சித்தர் வித்தியாசமான ஒரு கருத்தினை முன் வைக்கிறார். அதாவது பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது. அதே போல பிள்ளைகள் செய்த தரும பலன்கள் பெற்றோரைச் சென்றடையாது. அவரவர் செய்த, செய்கிற வினைகளின் பலன் அவரவரை மட்டுமே சாரும் என்கிறார்.
"தந்தைதாய் செய்தவினை சந்ததிக்கு ஆமென்பார்
சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
சிந்தை தெளிந்திலரே."
"பிள்ளைகள் செய்த தன்மம் பெற்றோர்க்கு உறுமென்றால்
வெள்ளறிவு ஆகுமடி குதம்பாய்
வெள்ளறிவு ஆகுமடி."
- குதம்பைச் சித்தர் -
“என்னுடைய பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்னைக் காக்கவில்லையே" என்று யாராவது புலம்பினால் அது அவர்கள் அறியாமைக் குறிக்கும்.
"என்னுடைய பெற்றோர் செய்த பாவத்தால் நான் துன்பங்களை அனுபவிக்கிறேன்" என்று யாரேனும் வருந்தினால் அதுவும் அவர்கள் அறியாமைக் குறிக்கும்.
"இது எனது வினையின் பயனே" என உணந்து தெளிவடைவதே அறிவுடையவர் செயலாகும் என்கிறார் குதம்பைச் சித்தர்.

திருமூலர் சொல்கிறார் மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று

சித்தர்களின் தலைவர் அகத்தியர் சொன்னது 🙏 திருமூலர் சொல்கிறார் மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று, அதாவது மனது செம்மையாக மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். மனதை செம்மைப்படுத்த ஒருநிலையாக்க மந்திரம் என்பது அவசியம்.
கண்களை மூடி கொண்டு நெற்றிபொட்டில் கவனம் செலுத்துங்கள் மனம் குவியும் என்கிறார் ஒருவர்,

அப்படி செய்வதை விட விளக்கு ஒன்றோ, வெளிச்சம் ஒன்றோ அந்த இடத்தில் பிரகாசிப்பதாக பாவனை செய்யுங்கள் மனம் வசமாகும் என்கிறார் வேறொருவர்.
மூக்கு நுனியை பார்க்க சொல்கிறார் ஒருவர், மூலாதாரத்தை கவனி என்கிறார் ஒருவர் இப்படி அவரவருக்கு பரிச்சயமான வழிவகைகளை கூறுகிறார்கள். இவைகள் எல்லாமே சரிதான், ஆனால் இவைகள் எல்லாவற்றையும் விட மந்திரம் ஜெபிப்பது ரொம்ப சரி
மனம் ஒருநிலைப்பட மந்திரம் வேண்டும், இறைவனை துதிப்பாட மந்திரம் வேண்டும், அவனை அர்ச்சனை செய்ய மந்திரம் வேண்டும், கல்யாணம் நடத்த, பெற்ற பிள்ளையை தொட்டிலில் போட, பாடம் துவங்க என்று துவங்கி மயானம் வரையில் மந்திரம் என்பது தேவைப்படுகிறது.
ஒவ்வொரு தமிழனின் வாழ்விலும் இப்படி அத்தியாவசியமாகி போன மந்திரங்களை பற்றி சாதாரண மனிதர்களாகிய நாம் தெரிந்து வைத்திருப்பது என்ன?
அதை பற்றி எந்தளவு தெரியும் உங்களுக்கு?

ஏழு வகை தீட்சை


1. பட்டாடை போட்டு மறைத்துச் சீடனின் வலக்காதில் திருவைந்தெழுத்தை உபதேசிப்பது வாசக தீட்சையாகும்.
2. பறவை தனது முட்டையைச் சிறகினால் அணைத்து வெப்பமூட்டி, குஞ்சு வெளிப்பட செய்வது போல, குரு தனது சீடனைத் தன் திருக்கரத்தால் ஸ்பரிசிப்பது ஸ்பரிச தீட்சையாகும்.

3.மீன் தனது முட்டைகளைப் பார்வையினால் பொரிக்கச் செய்து, அவற்றின் பசியையும் போக்குவது போல, குருநாதர் தம் சீடனை அருள் பார்வையால் ஞானமீந்து அருளல் சட்சு தீட்சை அல்லது நயன தீட்சை எனப்படுகிறது.
4. ஆமை கரையிலிருந்தவாறே தனது முட்டையைத் தனது மனத்தில் நினைக்க, ஆமைக்குஞ்சு வெளிப்படுவது போல, குரு தம் சீடனை அருள் உருவாய் பாவிப்பது மானச தீட்சையாகும்.
5. பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளின் உண்மையினையும், இயல்பினையும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கி முக்திப் பேறடைய சிவாகமங்கள் வழியில் நின்று தெளிய போதிப்பது சாத்திரத் தீட்சையாகும்.
6. சிவயோகம் பயில உபதேசிப்பது யோக தீட்சையாகும்.
7. குண்ட மண்டலமிட்டு அக்நி காரியம் செய்து, பாசத்தைப் போக்குவது அவுத்திரி தீட்சையாகும்.

தோல் வியாதிக்கான மருத்துவம்



இப்போ பனிகாலம் பனிக்காற்று முகருக்கம் தோல் உரிவது பனிபத்து சொரி எல்லா வரும் அதற்க்கு தன்னை அழகா வைத்துக்குள்ள ஸ்டாபேரி உதவுகிரது 4 பழம் ஸ்டாபேரி 1/2 ஒரு ஸ்பூன் தேன் கற்றால. ஜெல் ஒரு ஸ்பூன் ஆலீவ் Oil ஒரு ஸ்பூன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தை கை கால் சுத்தம் செய்துட்டு பேஸ்டை அப்பளை செய்துட்டு 15 நிமிடம் காயவிட்டு பின் 10 மஜஜ் செய்து குளிந்த நீரால் கலுவிட்டா முகம் கண்ணாடி போல் மின்னும் ஆண் பெண் இருவருமே உபயோகம் செய்லாமே