Monday, 13 January 2020

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?

அழித்தல் மற்றும் இறப்பிற்கான செயலைப் செய்பவர் இறைவன் சிவபெருமான். பிரம்மர் உயிரைப் படைப்பதும், விஷ்ணு படைக்கப்பட்ட உயிரை காக்கவும் இருக்கும்போது அந்த உயிருக்கு முக்தி அளிக்கக்கூடிய இறப்பை வழங்கும் இறைவனாக திகழ்பவர் சிவபெருமான்.
★கோபம்:
சிவனின் கோபத்தை நினைத்து பார்க்கும்போது நமக்கு தோன்றுவது அவரின் நெற்றிக்கண் என்றறியப்படும் மூன்றாவது கண். இந்த நெற்றிக்கண் பற்றிய ரகசியம் என்னவாக இருக்கும் என்று நமக்கு அறிந்து கொள்ளும் ஆவல் தானாகவே வருவதுண்டு. இந்து மதத்தின் எல்லா நூல்களும் சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் ஒவ்வொரு கதையிலும் இந்த கண் பற்றிய ரகசியம் வெவ்வேறாக உள்ளன.

★நெற்றிக்கண் திறப்பு:
இறைவன் சிவன் இந்த உலகத்தை அழிவிலிருந்து பல முறை காப்பாற்றியுள்ளார். அவருடைய நெற்றிக்கண் திறக்கும் போதெல்லாம் அது ஒரு சிக்கலான மற்றும் அவசர நேரங்களைக் குறிப்பதாக அறியப்படுகிறது. துன்பங்களுக்கு அழிவைக் கொடுக்கும் நேரமாகவும் இருக்கிறது.
★சிவபெருமான் மற்றும் காமதேவன்:
ஒருமுறை காமதேவன் சிவனை தியானத்திலிருந்து கலைக்க முயற்சிக்கும்போது சிவபெருமான் கோபமடைந்து தன் நெற்றிக்கண்ணை திறந்தார். அவரது நெற்றிக்கண் காமதேவனை அழித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பாக உருவகப்படுத்தப்படுகிறது.
எந்த ஒரு பொருள் சார்ந்த உணர்வும் ஆன்மீக பாதையில் தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது என்பது இதன் மூலம் அறியப்படுவதாகும்.
★சிவபெருமானும் பார்வதி தேவியும்:
ஒரு முறை பார்வதி தேவி விளையாட்டுக்காக சிவனின் கண்களை மூடியதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்ததாக ஒரு கதை உண்டு. சிவபெருமானின் இரண்டு கண்கள் சூரியன் மற்றும் சந்திரன் என்று கூறப்படுகிறது. ஆகவே பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடியவுடன் இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. ஆகவே பிரபஞ்சத்திற்கு ஒளியை கொடுக்க சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணை திறந்ததாக கூறப்படுகிறது.
★யோகிகளின் வழிகாட்டி:
சிவனின் நெற்றிக்கண் ஞான ஒளி மற்றும் விழிப்புணர்வைக் குறிக்கும்.எல்லாவற்றையும் அறிந்த யோகியாக சிவபெருமான் அறியப்படுகிறார். அவருக்கு பின்னால் வந்த யோகிகள் மற்றும் துறவிகளுக்கு அவர் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறார்.

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!*

*🌸வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!*

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

பயன்கள்:
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.
தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.

ஒருவரைப்போல் இன்னொருவர் அமைவதற்க்கு, சாத்தியக்கூறுகளே கிடையாது,

ஒருவரைப்போல் இன்னொருவர்
அமைவதற்க்கு,
சாத்தியக்கூறுகளே கிடையாது,
ஒவ்வொருவரிடமும் உள்ளது,
அவரவரின் குழந்தைப்பருவம் முதல்,
சேகரித்துவந்த சேகரிப்பே,
ஆகவே அனைவரும் தனி தனி மனிதர்கள் தான்,
சிலரை சகித்துக் கொள்கிறோம்,
சிலரை ஏற்றுக்கொள்கிறோம்
அவ்வளவே, ஒருவர் இன்னொருவர் ஆக முடியாது........

*பெரியோர்களின் உபதேச மொழி*
ஏ மனமே! நீ இருக்கின்றவரை எனக்கு
நிம்மதி இல்லை. உன்னை நாயுக்கும், குரங்குக்கும் ஒப்பிட்டு ஆன்றோர்கள்
சொன்னது மிகச் சரியே.
உலக ஆசையில் ஏதோ சாதனைப் புரிவதாக எண்ணி ஏதேதோ செய்கின்றாய். இதனால் பாவ புண்ணியங்கள் கூடுகின்றன.
ஆத்மாவாகிய எனக்கும் பிறவிகள்
கூடுகின்றன.
பெற்றோர்கள் அவர்களின் கடமைகளைச் செய்தனர். கைமாறாக
எதையும் செய்ய முடியவில்லை.
மனைவி, செல்வக் காதலி என்றாய்.
அவள் பேச்சைக் கேட்டால் நான் நல்லவன். இல்லை எனில் நாய்க்குக்
கிடைக்கும் மரியாதைகூட எனக்கில்லை.
பிளைகள் விருப்பத்தை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றினால் நல்ல அப்பா. இல்லை எனில் அவர்கள் காரி துப்பாதது ஒன்றுதான் குறை.
சொந்த பந்தங்களைச் சொல்லவே வேண்டாம். அவர்களது இல்லத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று, செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்தால்
பாராட்டு. இல்லை எனில் அவமரியாதை.
பிறகு பாழாய்ப்போன உடம்போ, ஆயிரம்
தொல்லைகள்தருகின்றன.இவ்வளவிற்கும், காரணம் யார் தெரியுமா? மனமாகிய
நீ செய்கின்றசேட்டைகள்தான்.எல்லாரும்
நடிக்கின்றனர். நீயும் அவர்களோடு சேர்ந்து நடிக்கின்றாய்.
உன்னால்தான் எனக்கு இப்போராட்டம்.
எப்போது செயல்படாது சாகின்றாயோ
அப்போதுதான் எனக்கு விடுதலை.

தன் வினை தன்னை மட்டுமே சுடும்..!


அப்பா அம்மா செய்த புண்ணிய பலன் பிள்ளைகளுக்கு வராதாம்..!!
குதம்பைச் சித்தரின் வித்தியாசமான ஒரு கருத்து..!!
பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது.
எந்த ஒரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு என்பது நவீன அறிவியல் நமக்குத் தந்த நியூட்டனின் மூன்றாம் விதி.
நமது மரபியலில் இந்த ”வினையின் எதிர் வினை” ஆயிரமாண்டுக ளுக்கு முன்னர் இருந்தே பேசப் பட்டு வருகிறது.ஆனால் அவை மதம் சார்ந்த அல்லது ஒருவரின் எண்ணம்,செயல்,சிந்தனை சார்ந்த நம்பி க்கையின் அங்கமாக சொல்லப் பட்டிருக்கிறது.

ஒருவர் தனது முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினை பலன்கள் அவர்களையே வந்து சேரும்.அதே போல பெற்றவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிகளுக்கு வந்து சேரும் என்கிற நம்பிக்கையும், நம்மில் பலருக்கும் உள்ளது. நாம் இந்த கருதுகோளைத்தான் கொண்டிருக்கிறோம்.
ஆனால், குதம்பைச் சித்தர் வித்தியாசமான ஒரு கருத்தினை முன் வைக்கிறார். அதாவது பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது. அதே போல பிள்ளைகள் செய்த தரும பலன்கள் பெற்றோரைச் சென்றடையாது. அவரவர் செய்த, செய்கிற வினைகளின் பலன் அவரவரை மட்டுமே சாரும் என்கிறார்.
"தந்தைதாய் செய்தவினை சந்ததிக்கு ஆமென்பார்
சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
சிந்தை தெளிந்திலரே."
"பிள்ளைகள் செய்த தன்மம் பெற்றோர்க்கு உறுமென்றால்
வெள்ளறிவு ஆகுமடி குதம்பாய்
வெள்ளறிவு ஆகுமடி."
- குதம்பைச் சித்தர் -
“என்னுடைய பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்னைக் காக்கவில்லையே" என்று யாராவது புலம்பினால் அது அவர்கள் அறியாமைக் குறிக்கும்.
"என்னுடைய பெற்றோர் செய்த பாவத்தால் நான் துன்பங்களை அனுபவிக்கிறேன்" என்று யாரேனும் வருந்தினால் அதுவும் அவர்கள் அறியாமைக் குறிக்கும்.
"இது எனது வினையின் பயனே" என உணந்து தெளிவடைவதே அறிவுடையவர் செயலாகும் என்கிறார் குதம்பைச் சித்தர்.

திருமூலர் சொல்கிறார் மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று

சித்தர்களின் தலைவர் அகத்தியர் சொன்னது 🙏 திருமூலர் சொல்கிறார் மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று, அதாவது மனது செம்மையாக மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். மனதை செம்மைப்படுத்த ஒருநிலையாக்க மந்திரம் என்பது அவசியம்.
கண்களை மூடி கொண்டு நெற்றிபொட்டில் கவனம் செலுத்துங்கள் மனம் குவியும் என்கிறார் ஒருவர்,

அப்படி செய்வதை விட விளக்கு ஒன்றோ, வெளிச்சம் ஒன்றோ அந்த இடத்தில் பிரகாசிப்பதாக பாவனை செய்யுங்கள் மனம் வசமாகும் என்கிறார் வேறொருவர்.
மூக்கு நுனியை பார்க்க சொல்கிறார் ஒருவர், மூலாதாரத்தை கவனி என்கிறார் ஒருவர் இப்படி அவரவருக்கு பரிச்சயமான வழிவகைகளை கூறுகிறார்கள். இவைகள் எல்லாமே சரிதான், ஆனால் இவைகள் எல்லாவற்றையும் விட மந்திரம் ஜெபிப்பது ரொம்ப சரி
மனம் ஒருநிலைப்பட மந்திரம் வேண்டும், இறைவனை துதிப்பாட மந்திரம் வேண்டும், அவனை அர்ச்சனை செய்ய மந்திரம் வேண்டும், கல்யாணம் நடத்த, பெற்ற பிள்ளையை தொட்டிலில் போட, பாடம் துவங்க என்று துவங்கி மயானம் வரையில் மந்திரம் என்பது தேவைப்படுகிறது.
ஒவ்வொரு தமிழனின் வாழ்விலும் இப்படி அத்தியாவசியமாகி போன மந்திரங்களை பற்றி சாதாரண மனிதர்களாகிய நாம் தெரிந்து வைத்திருப்பது என்ன?
அதை பற்றி எந்தளவு தெரியும் உங்களுக்கு?

ஏழு வகை தீட்சை


1. பட்டாடை போட்டு மறைத்துச் சீடனின் வலக்காதில் திருவைந்தெழுத்தை உபதேசிப்பது வாசக தீட்சையாகும்.
2. பறவை தனது முட்டையைச் சிறகினால் அணைத்து வெப்பமூட்டி, குஞ்சு வெளிப்பட செய்வது போல, குரு தனது சீடனைத் தன் திருக்கரத்தால் ஸ்பரிசிப்பது ஸ்பரிச தீட்சையாகும்.

3.மீன் தனது முட்டைகளைப் பார்வையினால் பொரிக்கச் செய்து, அவற்றின் பசியையும் போக்குவது போல, குருநாதர் தம் சீடனை அருள் பார்வையால் ஞானமீந்து அருளல் சட்சு தீட்சை அல்லது நயன தீட்சை எனப்படுகிறது.
4. ஆமை கரையிலிருந்தவாறே தனது முட்டையைத் தனது மனத்தில் நினைக்க, ஆமைக்குஞ்சு வெளிப்படுவது போல, குரு தம் சீடனை அருள் உருவாய் பாவிப்பது மானச தீட்சையாகும்.
5. பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளின் உண்மையினையும், இயல்பினையும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கி முக்திப் பேறடைய சிவாகமங்கள் வழியில் நின்று தெளிய போதிப்பது சாத்திரத் தீட்சையாகும்.
6. சிவயோகம் பயில உபதேசிப்பது யோக தீட்சையாகும்.
7. குண்ட மண்டலமிட்டு அக்நி காரியம் செய்து, பாசத்தைப் போக்குவது அவுத்திரி தீட்சையாகும்.

தோல் வியாதிக்கான மருத்துவம்



இப்போ பனிகாலம் பனிக்காற்று முகருக்கம் தோல் உரிவது பனிபத்து சொரி எல்லா வரும் அதற்க்கு தன்னை அழகா வைத்துக்குள்ள ஸ்டாபேரி உதவுகிரது 4 பழம் ஸ்டாபேரி 1/2 ஒரு ஸ்பூன் தேன் கற்றால. ஜெல் ஒரு ஸ்பூன் ஆலீவ் Oil ஒரு ஸ்பூன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தை கை கால் சுத்தம் செய்துட்டு பேஸ்டை அப்பளை செய்துட்டு 15 நிமிடம் காயவிட்டு பின் 10 மஜஜ் செய்து குளிந்த நீரால் கலுவிட்டா முகம் கண்ணாடி போல் மின்னும் ஆண் பெண் இருவருமே உபயோகம் செய்லாமே

நட்சத்திர படி குழந்தை பெயர்கள்

நட்சத்திரம் தமிழ் எழுத்து English Letter
1 அசுபதி சு, சே, சோ, ல CHU,CHEY,CHO,LA
2 பரணி லி, லு, லே, லோ LI,LU,LEY,LO
3 கிருத்திகை அ, இ, உ, எ AO,Ee,UO,A
4 ரோகிணி ஒ, வ, வி, வு O,VA,VEE,VOO

5 மிருகசீரிஷம் வே, வோ, கா, கி VAY,VO,KAA,KE
6 திருவாதிரை கு, க, ச, ஞ KOO,GHAA,JNA,CHA
7 புனர்பூசம் கே, கோ, ஹ, ஹி KAY,KO,HAA,HEE
8 பூசம் ஹூ, ஹே, ஹோ, ட HOO,HAY,HO,DAA
9 ஆயில்பம் டி, டு, டே, டோ DEE,DOO,DAY,DO
10 மகம் ம, மி, மு, மெ MAA,MEE,MOO,MAY
11 பூரம் மோ, ட, டி, டு MO,TAA,TEE,TOO
12 உத்திரம் டே, டோ, ப, பி TAY,TO,PAA,PEE
13 அஸ்தம் பூ, ஷ, ந, ட PU,SHAA,NAA,THA
14 சித்திரை பே, போ, ர, ரி PAY,PO,RAA,REE
15 சுவாதி ரு, ரே, ரோ, த RU,RAY,RO,TAA
16 விசாகம் தி, து, தே, தோ THEE,THOO,TAHY,THO
17 அனுஷம் ந, நி, நு, நே NA,NEE,NOO,NAY
18 கேட்டை நோ, ய, இ, பூ NO,YAA,YEE,YOO
19 மூலம் யே, யோ, ப, பி YAY,YO,BAA,BEE
20 பூராடம் பூ, த, ப, டா BU,DHAA,BHA,DHA
21 உத்திராடம் பே, போ, ஜ, ஜி BAY,BO,JAA,JEE
22 திருவோணம் ஜூ, ஜே, ஜோ, கா JU,JAY,JO,GHA
23 அவிட்டம் க, கீ, கு, கூ GAA,GEE,GOO,GAY
24 சதயம் கோ, ஸ, ஸீ, ஸூ GO,SAA,SEE,SOO
25 பூரட்டாதி ஸே, ஸோ, தா, தீ SAY,SO,DAA,DEE
26 உத்திரட்டாதி து, ச, ஸ்ரீ, ஞ DHU,THA,SA,GHEE
27 ரேவதி தே , தோ, ச, சி

*மரகதலிங்கம் உத்திரகோசமங்கை*


வருடம் பூரா சந்தனக் காப்பு.
அபிஷேகம் மரகத நடராசருக்கு ஆண்டுக்கு ஒரு நாளே !
அது மார்கழி மாதம் வரும் மிருகசீஷ நட்சத்திரத் திருநாளைக்கு.
அடுத்தநாள் திருவாதிரை புதுச் சந்தனக் காப்பு சாற்றப் படும்.
நிறையப் பேர் இப்படித்தான் ஆருத்திரா தரிசனம் எனக் காலண்டரில் பார்த்து
நடராசரை சந்தனக் காப்பு களைந்த திருக்கோலத்தில்
காணமுடியாமல் போயிற்றே என ஏமாற்றம் அடைகிறார்கள்…

ஒருநாள் முன்னே வரவேண்டுமா, தெரியாது போயிற்றே
என ஆதங்கப் பட்டுச் செல்வோர்களை ;
நிறையவே பார்த்திருக்கிறேன்
களைந்த திருக்கோலத்தில் காண நீங்கள் வரவேண்டிய நாள் திருவாதிரைக்கு முதல் நாள்…
திருவாதிரை அல்ல…!
இப்படி நடராசப் பெம்மானின் அபிஷேகம் காணஇயலாமல்
அடுத்த நாள் அறியாமல் வந்து ஏமாறாமல் இருக்க
இருக்கவே இருக்கிறது இங்கு தினம் தினம் மதியம் 12;45க்கு
நடக்கும் மரகதலிங்க அபிஷேகமும், ஸ்படிக லிங்க அபிஷேகமும்……
கோவிலின் உள் வாயிலிலேயே அபிஷேகப் பொருட்கள் என்று கேட்டால் தருவார்கள்.
உங்கள் சார்பில் இனிதே நடக்கும் அபிஷேகம்
அருகே அமர்ந்து அருமையாக தரிசிக்கலாம்…
இதில் மரகத லிங்கம் மரகத நடராசரையும்
ஸ்படிக லிங்கம் மங்களேச்சுவரரையும் குறிக்கிறது
இங்கு இறவா நிலை பெற்று அமர்ந்துள்ள மணிவாசகரே
இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக ஐதீகம்.
அதனால்தான் மணிவாசகரின் இராஜகோலச் சிலை,
மரகதலிங்கம் அபிஷேகம் செய்யும் இடம், உமா மகேச்சுவர சன்னசி
மூன்றும் நேர்கோட்டில் உள்ளன.
நிகழ்ச்சி முடிவில் அபிஷேக தீர்த்தம்
பக்தர்கள் சிரம் மீது தெளிக்கப் படும்….
இதில் சகல பாவங்களும் கழுவப் படுவதாய் பக்தர்களின் நம்பிக்கை
பிணி பீடை தீருவதாய் சிலரது எண்ணம்….

கொங்ணார்

கொங்ணார் வறலாற் தொடர்ச்சி
போகரின் காலில் விழுந்த கொங்கணர், தான் ஒரு தேர்ந்த சித்தனாகிட தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார்.
‘‘உபதேசம் செய்வது பெரிய விஷயமல்ல...! அதைப் பின்பற்றி தவம் செய்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்றார், போகர்.
‘‘நானும் தவம் செய்வேன் ஸ்வாமி..!’’
‘‘தவம் புரிவது என்பது, உயிரை வளர்க்கும் செயல் போன்றதன்று.
அதற்கு நேர் மாறானது. தான் என்பதே மறந்து, உபதேசம் பெற்ற மந்திர சப்தமாகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒரு செயல்.’’
‘‘தங்கள் சித்தப்படியே நான் என்னை மறந்து தவம் செய்வேன் ஸ்வாமி!’’
‘‘தன்னை மறப்பது அவ்வளவு சுலபமல்ல அப்பனே.... உன் ஜாதகக் கணக்கு அதற்கு இடம் தரவேண்டும். ஏனென்றால், வினைவழி கர்மங்களால்தான், மானுடப் பிறப்பெடுக்கிறோம்.

அந்தப் பிறப்புக்கென்று எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. நீ விரும்பினாலும் அவை உன்னை மறக்கவிடாது
ஒருவேளை அந்தக் கணக்கை நீ வாழும் நாளில் தீர்க்க இயலாவிட்டால், உன் பிள்ளைகள் அந்தக் கணக்கை நேர் செய்ய வேண்டியிருக்கும்.
அப்படிப்பட்ட கணக்கு எப்படிப்பட்டது என்றும் ஒருவருக்கும் தெரியாது. அந்தக் கணக்கு தீராமல் நீ சித்தனாக முடியாது....’’
‘‘எந்த வகையில் அந்தக் கணக்கை அறிவது? எப்படி அதை நேர்செய்வது?’’
தவத்தில் மூழ்கு....
தவம் கலையாமல் தொடர்ந்தால், அந்தக் கணக்குகளில் பாக்கி எதுவும் இல்லை
என்று பொருள்.
தவம் தடைபட்டால், அந்தக் கணக்கு தன்னை நேர்செய்து கொள்ள உன்னை அழைக்கிறது என்று பொருள்...’’
‘‘இப்படித்தான் நாம் உணர முடியுமா...?
வேறு வழிகள் இல்லையா?’’
‘‘பஞ்சபூதங்களை ஒன்றாக்கிப் பிசைந்தால் வருவதுதான் இந்த தேகம்.
அதே பஞ்ச பூதங்களால்தான், பின் இது வளர்ந்து பெரிதாகிறது. மெல்ல மாயை வயப்பட்டு, புலன்களுக்குப் புலப்படுவதை மட்டுமே இருப்பதாகவும், புலனாகாததை இல்லாததாகவும் இது கருத ஆரம்பித்து விடுகிறது.
உன் கேள்வியும் கூட அப்படி மாயையில் வீழ்ந்த ஒரு மனிதன் கேட்பது போல்தான் இருக்கிறது. பல விஷயங்களை இந்த உலகில் நாம் சூட்சுமமாகத்தான் உணர முடியும்.
பச்சைப் பசேல் என்று ஒரு நிலப்பரப்பு கண்ணில் பட்டால், அங்கே நிலத்தடியில் நீர் வளம் சிறப்பாக இருப்பதாக உணரலாம்.
மரம் முழுக்க கனிகள் கொழித்துக் கிடந்தால்,
மரத்தின் ஆணிவேர் பலமாக இருக்கிறது என்று உணரலாம். மரத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை.
உனது கர்மக் கணக்கு எப்படி என்று அறியவு

உனது கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி...

தவம் செய்! தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும்.
நாம் நல்வினைகள் புரிந்திருந்தால்,
நமது தவம் வலுவானதாக இருக்கும்...
தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும்.
எது வலுவானது என்பதை,
களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்...!’’
அய்யன் போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது.
அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது.
போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது.
‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது.
நான் மயங்கமாட்டேன்..


மயங்கமாட்டேன்...’’ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார்.
ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது.
எனவே,
கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன.
அதேசமயம்,
மெதுவாக செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின...
அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது...!
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும்,
சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம்.
ஒருவர், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்;
தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம்.... யாகமும் ஹோமமும் குறைஇல்லாமல் நிறைவேற்றப்பட்டால்,
அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும்.
உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள்.
பற்றற்றவர்கள்
இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக தோன்றும்.
துறவிகளுக்கு எதற்கு அது?
இருந்தும்,
சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம்.
அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம்.

ஐந்து_ஐந்துது_ஐந்து பஞ்ச கன்னியர்


1.பஞ்ச கன்னியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.
2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.
7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.
12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.
14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.
17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.
18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்

‘சிரஞ்சீவி’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை
‘சிரஞ்சீவி’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை ‘சிரஞ்சீவி’ என்பர்.
அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர்.
மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள்.
இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்?
எமனுக்கு பயந்து 16 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.
மார்கண்டேயனுக்கு 16 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும்.....
அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.
ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு சீக்கிரம் உபநயனம் செய்வித்ததார்.
பின்னர் பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக என்று பணித்தார்.
மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.

சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற.....
அவர்களும், தீர்க்கா யுஷ்மான் பவ என்று வாழ்த்திவிட்டார்கள்.
பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 16 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று.
என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா.
இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள்.
அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார்.
இப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.
பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா?
ஆகவே தான் சிவபெருமான்

பல கோடி சூரிய சக்தியை உள்ளுக்குள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலையை வழிபட போகின்றோம்!

பல கோடி சூரிய சக்தியை உள்ளுக்குள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலையை வழிபட போகின்றோம்!
இந்த அபூர்வ நடராஜர் சிலை ஆசிய கண்டத்தில் வேறு எங்கும் இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது!
இந்த சிலை மானிடர்களால் உளி கொண்டு செதுக்கப்பட்டது இல்லை..
சித்தர்களின் ஆன்மீக சக்தியால் , நவ லிங்க பூஜை வழிப்பாட்டிற்கு பின் தானாக உருவாகிய அற்புதத்திலும் அற்புதமான சிலை இது ஆகும்!

10 லட்சம் கோடி பாறை நம் பூமியில் உருவானால் , அதில் இந்த நடராஜர் சிலை உருவான
பஞ்சநதான பாறை ஒன்றே ஒன்றுதான் உருவாகும்!
இந்தக் கோவிலில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்தால் , ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.
மாசி மாதம் வளர்பிறையில் இங்கு உள்ள தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்யும்போது , பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன என்று கூறப்படுகிறது!
ஆகவே மாசி மாதம் வளர்பிறை பிரதோஷம் அன்று இக்கோவில் சென்று , ஒரு கோடி புண்ணியத்தை என் குருநாதன் ஸ்ரீ அகத்திய சித்தரின் வாக்குப்படி பெற உள்ளோம்!
🙏🏽நீங்களும் வாருங்கள்🙏🏽
பல நோய்களை குணப்படுத்த கூடிய அதிசய பிரம்ம தீர்த்தம் இக்கோவில் உள்ளது!
இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்திய வெட்டிவேரை நீரில் ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகளை அடியோடு குணமாகுகிறது!
👉இங்குள்ள கொடிமரம் அருகில் மேல் விதானத்தில், 27 நட்சத்திரம், 15 திதிகள், 12 ராசிகள், 9 கிரகங்கள் வடிவமைக்க பட்டு உள்ளது! இதன் கீழ் நின்று நாம் வழிபடும் போது நமது ஜாதகமே மீண்டும் ஒரு முறை நற் ஜாதகமாக சிருஷ்டிக்க படுகிறது!
எங்களின் அடுத்த யாத்திரையில் இக்கோவிலுக்கும் செல்கின்றோம்!
*இக்கோவில் திருச்சி மாவட்டம், திருச்சி to சென்னை வழியில் உள்ள பாடலூரிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் உள்ள ஸ்ரீ சுத்த ரத்தானேஸ்வரர் ஆகும்!*

இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில்

கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
ஜமத்கனி முனிவர் – ரேணுகாதேவி தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தவர் ராமர். விஷ்ணுவின் ஆறாவது தோற்றமாகக் கருதப்படும் அவர், சிவபெருமானை வழிபட்டு, அவரிடமிருந்து ‘பரசு’ எனும் கோடாரியைப் பெற்றதால் ‘பரசுராமர்’ என்று அழைக்கப்பட்டார்.
ஒரு நாள் ரேணுகாதேவி ஆற்றில் குளிக்கச் சென்றார். அவர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது, வானத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல், அந்த ஆற்று நீரில் தெரிந்தது. ஆற்று நீரில் தெரிந்த நிழல் உருவத்தைப் பார்த்து அவர் வியப்படைந்தார். இந்தக் காட்சி தியானத்திலிருந்த ஜமத்கனி முனிவரின் மனதில் தோன்றி மறைந்தது.

உடனே ஜமத்கனி முனிவர், தனது மகன் பரசுராமரை அழைத்து, ‘உன் தாய், கந்தர்வன் ஒருவனைப் பார்த்து மயக்கம் கொண்டு விட்டாள். உடனடியாக அவளைக் கொன்று விட்டுத் திரும்பி வா’ என்று ஆணையிட்டார். தந்தையின் ஆணையைக் கேட்டப் பரசுராமர், தனது தாய் என்றும் பாராமல் ரேணுகா தேவியைக் கொன்று விட்டுத் திரும்பினார்.
திரும்பி வந்த அவர், ‘தந்தையே, தங்களின் ஆணைப்படி நான் தங்களது மனைவியைக் கொன்று விட்டேன். ஆனால், தற்போது நான் தாயை இழந்து நிற்கிறேன். என் மனம், தாயன்பை வேண்டித் தவிக்கிறது. என் தாயின் உடலை உயிர்ப்பித்துத் தந்திட வேண்டும்’ என்று வேண்டினார்.
ஜமத்கனி முனிவரும், தான் சொன்னதைக் கேட்டு எந்த மறுப்பும் சொல்லாமல், தன் தாயையே கொன்று திரும்பிய மகனின் வேண்டுகோளை நிறைவேற்ற முன் வந்தார். உடனே அவர், தன் மனைவியின் உடலுக்கு உயிர் கொடுத்து, முன்பு போலவே திரும்பி வரச் செய்தார்.

பின்னொரு நாளில் ஜமத்கனி முனிவருடன் பகை கொண்டிருந்த அரசன் ஒருவன், யாருமில்லாத வேளையில் ஆசிரமத்துக்குச் சென்று, கண்களை மூடி தியானத்தில் இருந்த ஜமத்கனி முனிவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்று விட்டான். இதனையறிந்த பரசுராமர், அந்த அரசனைத் தேடிச் சென்று கொன்றார். அத்துடன், அரச குலத்தினர் அனைவரையும் தானே அழிப்பதாகச் சபதம் செய்தார். அதே வேளையில், திருமணம் செய்து கொண்டிருக்கும் அரசர்களை மட்டும் ஒரு வருடம் வரைக் கொல்வதில்லை என்று முடிவு செய்து கொண்டார்.
தான் செய்த சபதத்தின்படி அரச குலத்தைச் சேர்ந்த பலரையும் தேடிச்சென்று, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை அழித்துக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தன் தாயைக் கொன்றது, அரசர்களைப் போட்டியிட்டுக் கொன்றது போன்ற செயல்கள் அவரது மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி, அவருக்குப் பெரும் துன்பத்தைத் தந்தது.
அந்த துன்பத்திலிருந்து விடுபட விரும்பிய அவர், இனி எவருடனும் போர் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து, இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் இறையுருவங்களை நிறுவி, அதற்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தபடி பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்படி ஒருநாள், கேரள மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த கரமனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த ஆற்றில் அவருக்குச் சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அந்தச் சிவலிங்கத்தை ஆற்றின் கரைப்பகுதியில் நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். அப்போது அவர், தன் தாயைக் கொன்ற பாவம், பல அரசர்களைக் கொன்ற பாவமெல்லாம் நீங்கியதாக உணர்ந்தார்.
அந்தக் கோவிலிலேயே தன் தாயின் ஆன்மா உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் ஆன்மா அமைதி வழிபாட்டுச் சடங்கினைச் (பிதுர் தர்ப்பணம்) செய்தார். அந்தச் சடங்கிற்குப் பின்பு, அவருடைய அம்மாவின் ஆன்மா உயர்வு கிடைத்தது தெரிந்து மகிழ்ந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த மன வருத்தமெல்லாம் மறைந்து போனது.
பரசுராமர் சிவபெருமானை வழிபட்ட இடத்தில், அவரது பாதம் பொறிக்கப்பட்ட பீடம் ஒன்று இருக்கிறது. இந்தப் பீடத்தின் அருகில் பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் சிலை ஒன்று இருக்கிறது. இங்குள்ள பீடத்திற்குத் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
கோவில் அமைப்பு :
கரமனை ஆறு, கிள்ளியாறு, பார்வதிபுத்தனார் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சேருமிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இங்குள்ள சிவ பெருமானை பரசுராமரும், விஷ்ணுவின் தோற்றமான வேதவியாசரை விபா கரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் நிறுவினர் என்று இக்கோவிலுக்கான தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் பகவதி, கணபதி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தில் ‘திருவோணம் ஆறாட்டு’ மற்றும் ‘பரசுராமர் ஜெயந்தி’ எனும் இரு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இத்தலத்தில் பரசுராமர் தனது தாயின் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டினை (பிதுர் தர்ப்பணம்) செய்திருக்கிறார். இதே போல் ஆதிசங்கரர் அவருடைய தாய் ஆரியாம்பாளின் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டினைச் செய்திருக்கிறார். இதனால், இக்கோவில் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டிற்கும் (பலி, கர்மம், பிதுர் தர்ப்பணம்), கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதிக்கான வேள்விக்கும் (தில ஹோமம்) சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.
இங்கு தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆன்மா உயர்வுக்கான சிறப்பு வழிபாடும் (பலி, கர்மம், பிதுர் தர்ப்பணம்), காலை 6 மணி முதல் 10.30 மணி வரை கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதிக்கான சிறப்பு வேள்வியும் (தில ஹோமம்) நடத்தப்படுகின்றன.
இங்குள்ள விஷ்ணுவின் தோற்றத்திலான வேதவியாசர் சன்னிதியில், குழந்தைகள் கல்வியில் சிறப்பு பெற்றிட வேண்டிச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அருகிலுள்ள பிரம்மன் சன்னிதியில் நோயற்ற நீண்ட கால வாழ்க்கை வேண்டி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள பரசுராமர் பாதம் பொறிக்கப்பட்ட பீடத்தின் முன்பாக, அமைதியான மனநிலை அளிக்க வேண்டிப் பலரும் வணங்கிச் செல்கின்றனர்.
பிதுர் தர்ப்பணம் :
முன்னோர்களில் மூன்று தலைமுறையினர்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் செய்யப்படும் சடங்கை, ‘பிதுர் தர்ப்பணம்’ என்று சொல்கின்றனர். பிதுர் உலகத் தேவதைகளான வசு, ருத்ர, ஆதித்யர்களை எள் மற்றும் தண்ணீரால் நினைத்துக் கொண்டு இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கின் முடிவில் எள் கலந்தத் தண்ணீர், இறந்தவர்கள் பூவுலகில் செய்த செயல்பாடுகளுக்கேற்பத் தற்போதடைந்திருக்கும் நிலையில் அமிர்தமாகவோ, நெய்யாகவோ, தண்ணீராகவோ, பாலாகவோ, புல்லாகவோ, ரத்தமாகவோ மாறி, அவர்கள் பெற்றுக் கொள்ளும்படியாக வேண்டிக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அந்த ஆன்மா மகிழ்ச்சியையும், உயர்வையும் அடையும் என்பது இச்சடங்கின் நம்பிக்கை.
திருவல்லம் பெயர்க் காரணம் :
திருவல்லம் பரசுராமர் கோவில் விஷ்ணுவின் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் விஷ்ணுவின் உடல் பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோவில் விஷ்ணுவின் கால் பகுதியாகவும் விளங்குவதாக ஐதீகம். ஒரே நாளில் இம்மூன்று தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்குவது அனைத்து நலன்களையும், வளங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப் பகுதி தற்போது திருவல்லம் என்றழைக்கப்படும் பகுதி வரை நீண்டிருந்ததாம். எனவே திருவல்லம் என்ற இடத்தை தமிழில் ‘தலை’ என்று பொருள் தரும் மலையாள மொழிச் சொல்லான ‘வல்லம்’ என்ற பெயரில் அழைத்தனர். இறைவனின் தலைப்பகுதி என்பதைத் தெரிவிக்கும் விதமாகத் ‘திருவல்லம்’ என்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபரை நிறுவிய வில்வ மங்களம் சுவாமிகள் செய்த வழிபாட்டால், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் உருவம் தற்போது உள்ள அளவுக்குச் சுருங்கிப் போய் விட்டதாக இக்கோவிலின் தல வரலாறுகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அமைவிடம் :
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் நகரிலிருந்து கோவளம் கடற்கரைக்குச் செல்லும் புறவழிச் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவல்லம் திருத்தலம்.

மூலிகைக் குடிநீர் ..!*

மூலிகைக் குடிநீர் ..!*
மூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநிர். வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும். அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.


நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.
இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.
*ஆவாரம்பூ குடிநீர்*
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”
என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்

சிவ சிவசக்தி கௌரி மந்திரம்


ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே!!

பொது பொருள்:
சர்வ சக்திகளுக்கும் ஆதி சக்தியான தேவியே, அனைத்து விதமான மங்களங்களையும் அருள்பவளே, ஜீவராசிகள் அனைத்தையும் காப்பவளே, மூன்று கண்களை கொண்டவளே உன்னை வணங்குகிறேன்.🙏

முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி!*


செய்முறை விளக்கம் - Siddha medicine
கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில்
கோலை ஊன்றி குறுகி நடப்பவனும்
கோலை வீசி குலாவி நடப்பானே ...
சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.
நிலம், நீர் ,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்து கின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.
வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு-
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறையவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.
வாதம் - காற்று - 1, மாத்திரை அளவு --------- சுக்கு
பித்தம் - நெருப்பு - 1/2, மாத்திரை அளவு--------- இஞ்சி
கபம் - நீர் - 1/4, மாத்திரை அளவு -------- கடுக்காய்
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் ப
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.
சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் , கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ

சிவசிவ ஜபம் செய்வது எப்படி?


பொதுவாக ஒரு குரு தனது சீடனைத் தினந்தோரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மந்திரத்தை ஜபம் செய்யும்படி உபதேசிக்கிறார். ஜபத்தை எண்ணிக் கணக்கிடுவதை விரல்களின் மூலமாகச் செய்யலாம்: அல்லது ஒரு ஜப மாலையைக் கொண்டு செய்யலாம்: அல்லது மனதிற்குள்ளேயே செய்யலாம். ஜபமாலை சாதகனின் மனதை ஒரு முகப்படுத்துவதற்கு உதவி செய்கிறது.

ருத்ராக்ஷம், சந்தனம், இலந்தை தாமரைக்கிழங்கு, ஸ்படிகம், பவழம், தாமரை மணி, துளசிமாலை போன்றவற்றால் ஆன பலவித ஜப மாலைகள் இருக்கின்றன.
ஒரு சிலர் மனித அல்லது விலங்குகளின் எழும்புகளான ஜபமாலைகளையும் உபயோகிக்கிறார்கள். {அமானுஷ்ய சக்தி விரும்புகிறவர்களுக்கு மனித அல்லது விலங்குகளின் எழும்புகளை உபயோகிப்பார்கள்.}

ஜபிக்கும் மந்திரத்தைப் பொருத்தே உபயோகிக்கும் ஜபமாலையும் அமைகிறது. ஜபமாலை 108, அல்லது 54 மணிகளைக் கொண்டதாகும்.
ஒருவர் உபயோகிக்கும் ஜபமாலையை அவரைத் தவிர வேறு எவரும் உபயோகிக்க கூடாது.
மேலும் சாதகன் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தையே ஒரு மாலையின் மூலம் ஜபிக்க வேண்டும். ஒரே மாலையில் மூலம் வெவ்வேறு மந்திரங்களை ஜபிக்க கூடாது.
ஒரு மந்திரத்தை ஒருவன் ஒரு லட்சம் முறை ஜபித்தால் அந்த மந்திரம் சேதனமாக {உயிருள்ளதாக} ஆகிவிடுகிறது. ஜபம் செய்த மந்திரத்தை பத்தில் ஒரு பங்கு யாகமாகவும், அதில் பத்தில் ஒரு பங்கை அர்க்யமாகவும் செய்ய அந்த குறிப்பிட்ட மந்திரம் முழு பலத்தை பெற்று விடும் என்று சித்த நூல்கள் சொல்கின்றன.
நல்ல ஊக்கத்தோடு ஒருவன் ஒரு மந்திரத்தை சரியான உச்சரிப்பில் ஒரு முறை ஜபித்தாலும் அவனது மனம் தூய்மையடைந்துவிடுகிறது என்று ஜப விதானம் என்ற நூல் கூறுகிறது.
இதை பற்றிய பல விஷயங்களை முன்பே கூறிவிட்டபடியால் அடுத்த விஷயத்திற்கு வருவோம்.
ஜெபத்திற்கு ஏற்ற இடங்கள்:-
***********
* இறைவனைப் பற்றி நினைக்க விரும்பாதவர்கள் இருக்கும் இடங்கள்,
* எங்கு புனிதமான மனிதர்கள் கௌரவிக்கப்படுவதில்லையோ,
* எந்த இடத்தில் மனிதர்கள் ஈகையிலும் எளிய வாழ்க்கையிலும் விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்களோ,

அந்த இடங்கள் ஜபம் பழகுவதற்கு ஏற்றவையல்ல. மாறாக, அவை பிரதிகூலமான பலனை தருபவை.
ஜெபத்திற்கு ஏற்ற நேரம்:-
*********
தினந்தோரும் நாம் குறிப்பிட்ட நேரங்களிலேயே ஜபம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தோமானால் நம் மனதிலும் அந்த நேரங்களில் ஜபம் செய்வதற்குரிய தகுந்த மாற்றங்களும் ஏற்படுகின்றன. நமது மனதுக்கும், உடலுக்குமிடையே ஒரு சரியான நல்ல இணைப்பு ஏற்படுகிறது.
அது எது போன்றதென்றால், நாம் தினந்தோரும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே உணவு உட்கொள்ளுகிறோமென்றால், அந்த நேரம் வந்தவுடன் நமக்குப் பசியும் தானாகவே தோன்றுகிறதல்லவா? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் தூங்கச் செல்கிறோமென்றால், அந்த நேரம் வந்தவுடன் நமக்குத் தூக்கமும் வந்துவிடுகிறதல்லவா? அது போன்றுதான் நாம் குறிப்பிட்ட நேரங்களில் ஜபம் செய்வதென்பதுமாகும். அந்த நேரம் வந்தவுடன் நமது மனமும் ஜபம் செய்ய நம்மைத் தூண்டும்.
இவ்விதம் குறிப்பிட்ட நேரங்களில் தவறாமல் ஜபம் பழகுவதால் – நமது மனதின் ஆற்றல்கள் வளர்ந்து வலுப்பெற்று – நாம் நல்ல ஆன்மீக முன்னேற்றமும் காண முடிகிறது.
விடியற்காலை, நண்பகல், மாலை சந்தியாகாலம், நடு இரவு ஆகியவை ஜபம் செய்வதற்குரிய மிகவும் விசேஷமான காலங்கள்.
இவற்றைத் தவிர பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி திதிகளோடு கூடிய நாட்கள், மற்ற விஷேச பூஜை தினங்கள் மற்றும் கிரஹண காலங்கள், ஆகியவை ஜபம் செய்வதற்கு மிகவும் சிறந்தவையாகும்.
உச்சரிப்பு:-
****
புனித மந்திரமானது தெளிவாக உச்சரிக்கப்பட வேண்டும். இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஒரு எழுத்து மாறினாலும் அல்லது த்வனியில் {சத்தம்} ஏற்றம், குறைவு இருந்தாலும் பிரதினுகூலம் {எதிர்மறை} பலன்கள் தந்துவிடும்.
நாம் ஜபம் செய்யும்போது நமது உடல், மனம், ஆன்மா, நினைவு முழுவதும் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்தே செயல்பட வேண்டும்.
பெரும்பாலும் நமது வாய் மந்திரத்தை ஜபம் செய்கிறது. ஆனால் நமது மனமோ அதில் ஈடுபாடில்லாமல் தனித்து நிற்கிறது. அவை இரண்டும் இணைந்தாலும், நமது ஆன்மா {நினைவு முழுவதும்} அதில் விருப்பமில்லாமல் ஒதுங்கிவிடுகிறது. ஆனால் இவை மூன்றும் இணைந்தாலோ மந்திரம் நமது உள்ளத்தின் ஆழமான அடுக்குகளிலிருந்து எழும்புவதை நாம் அறியலாம். அந்தச் சமயத்தில் புனித மந்திரத்தால் ஏற்படும் தெய்வீக அதிர்வுகள் நமது உடலில் ஏற்படுத்தும் அது பேரானந்த நிலையை நமக்குள் தோற்றுவிக்கும். வார்த்தையால் விவரிக்க முடியாத பேரின்ப நிலை நமக்கு கிடைக்கும்.