ஆங்கிலேயன் பாரத மக்களை அடிமைப்படுத்திய காலத்தில் அவர்களுடைய சுயநலத்திற்காகவும் தகவல் பரிமாற்றத்திற்கான அடையாளக் குறிகளுக்காக நம்முடைய பாரத தேசத்தில் உள்ள புண்ணிய க்ஷேத்திரங்களில் விக்ரகங்களை புகைப்படம் எடுத்து கொண்டு சென்று தன்னுடைய அதிகாரிகளுக்கு காண்பித்து கொள்ளையடித்து செல்ல திட்டமிடுவதற்கு பயன்படுத்தினார்கள் எனவே அந்த ஆங்கிலேயர்கள் காலகட்டத்தில் அவர்களை புகைப்படம் எடுக்க விடாமல் நம் பாரத தேச வீரர்கள் தடுத்தார்கள் இதுவே காலப்போக்கில் பாதுகாப்பு கருதியே கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க தடை என்று பழக்கப் படுத்தி விட்டது தான் உண்மை
புகைப்படங்களிலோ, கைப்பேசிகளிலோ ஏற்படுகின்ற கதிர்வீச்சுகளால் நம்முடைய ஆதி புராதன புண்ணிய ஷேத்திரங்களில் கருவறையிலுள்ள எண்ணிலடங்கா சக்தி படைத்த கர்ப்பகிரகத்தின் இடத்தை மட்டும் மாற்றாமல் இருக்கும்பட்சத்தில் மூலவர்களும் எந்த ஒரு அணுவளவும் பாதிக்கப்படாது என்பதே உண்மை
உதாரணத்திற்கு நம்முடைய அர்ச்சகர்களும் ஆச்சாரியர்களும் சிவாச்சாரியார்களும் பட்டர் களும் போன்ற பலர் இன்றளவும் கோவிலின் சக்தியை குறையாமல் நிலைநாட்டவும் அன்றாட ஆச்சார அனுஷ்டானங்களுடன் நியம நிஷ்டையுடன் எந்திரீக மாந்திரீக தாந்திரீக ஷோடசோபசார பூஜைகளின் மூலமாகவும் தங்களால் இயன்ற வரையில் பல்வேறு வழிமுறைகளையும் கடைப்பிடித்து காப்பாற்றி வருகிறார்கள், ஆனால் இதில் தற்போதைய நவீன கால யுகத்தில் ஏதோ சிற்சில குற்றம் குறைகள் இருக்கலாம் அவைகளை அறிந்தவர்கள் சுமூகமாக சரி செய்ய ஆலோசனை வழங்கலாம்
இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க குறைந்தபட்சம் நாம் அங்கே செல்லும் போதாவது சில நிமிடங்கள் நம்முடைய மனம் அந்த இறைவன் மீது மட்டுமே நிலைத்து ஒன்றி இருப்பதற்காகவாவது தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்தில் மக்களை அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் கைப்பேசிகளை குறைந்தபட்சம் உட்பிரகாரத்தில் மட்டுமாவது அனைத்து வைக்கலாம் என்பது அடியேனுடைய சிறு கருத்து

No comments:
Post a Comment