Monday, 13 January 2020

அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரி விரதம் இருக்கும் முறை!!! Maha Shivratri Fasting Rules

(காலத்தால் மறைக்கப்பட்ட அபூர்வ சிவராத்திரி ரகசியங்கள்.)
(இந்த பதிவை முழுமையாக படியுங்கள். அடுத்த மாதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை வர இருக்கின்ற #யோக #சிவராத்திரியானது அகத்தியர் பெருமான் அருளால் உங்கள் தலையெழுத்தயே மாற்ற கூடிய அபூர்வ சிவராத்திரி. கடந்த சில வருடங்களுக்கு முன் ஸ்ரீ அகத்தியர் விஜயம் என்ற அபூர்வ நூலில் தொடராக வெளிவந்த சிவராத்திரி ரகசியங்கள் பற்றிய அபூர்வ சித்த குறிப்புகளை தொகுத்து பகிர்கிறேன்.அன்று முழுமையான சிவனருளை பெற சித்தர்களின் குரலோடு இணைத்து இருங்கள்.... அனைவருக்கும் பகிருங்கள் நன்மைகள் கோடி பெற)

சித்தர்களின் தலைவராக இருப்பவரும்,தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பெற்று பூமிக்குக் கொண்டு வந்தவரும்,ஜோதிடத்தின் தந்தையும், சித்த மருத்துவத்தின் தந்தையும்,மந்திரங்களின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷியின் அருளால் இந்த பதிவினை சித்தர்களின் குரலில் இன்று உங்களுக்கு வழங்குகிறோம்;
தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும்;அதுவும் எப்படி? இதுவரையிலும் நாம் எத்தனை ஆயிரம் முறை அல்லது எத்தனை லட்சம் முறை மனிதப் பிறவி எடுத்திருப்போம் என்று நமக்குத் தெரியாது; அத்தனை மனிதப் பிறவியிலும் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும்; அப்படி கரைந்து காணாமல் போவதால்,அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்தரகசியம் ஆகும்;
பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும்; ஏனென்றால்,பல சதுர்யுகங்கள் முடிந்து,பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள்; ஆகவே,சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி; ஆலமரத்தடியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகத்தில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே சிவராத்திரி மகிமையை எடுத்துச் சொல்வதற்காகத்தான்;
வெள்ளிக்கிழமையன்று திரயோதசி திதியும் , சதுர்த்தசி திதியும் சேர்த்து வந்தால், அதாவது ஒரே நாளில் பிரதோஷமும் மஹா சிவரத்திரியும் சேர்ந்து வந்த

No comments:

Post a Comment